‘ப்ராஜக்ட் ஃ’ நாவல் தற்போது ‘கிழக்கு பதிப்பகத்தின்’ வெளியீட்டில் புத்தம் புதிய அட்டைப்படத்துடன்!!!

0.jpg

நாவலைப் பெற – https://www.nhm.in/shop/9788184937350.html

ப்ராஜக்ட் ‘ஃ’ / Project ‘AK’

கவா கம்ஸ் / Kava Kamz

ISBN: 978-81-8493-735-0

பின்பக்க அட்டைப்படத்தில் நாவலைப் பற்றிய ஆசிரியர் குழுவின் குறிப்பு –

ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும்.

இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது.

ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுகின்றன.

அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.

பிராஜக்ட் ஃ – மர்ம நாவல்
(Project ‘ak’) – Fiction

Goodreads Book Giveaway

பிராஜக்ட் ஃ - Project AK by Kava Kamz

பிராஜக்ட் ஃ – Project AK

by Kava Kamz

Giveaway ends November 30, 2016.

See the giveaway details
at Goodreads.

Enter Giveaway

 

Front        Back

Author's note
        நம்பமுடியாத பல அதிசயங்கள் இப் பூமிப் பந்தில் நாளும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில, மனிதச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. அதற்காக அவை சாத்தியமே இல்லை என்று நாம் எண்ணுவது அறியாமை. அவ்வாறு எனக்குத் தோன்றிய ஒரு சரித்திர நிகழ்வை நான் ஆராய முற்பட்டேன். அதன் விளைவே இப் புதினம். 
        அந்த ஆய்வில் நான் கற்பனையாய் நினைத்துக் கொண்டிருந்த பலவற்றிற்கு  ஆதாரங்கள் கிடைத்தன. அந்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து கற்பனையோடு தொகுத்து நகைச்சுவையையும் கலந்து இப் புதினத்தை உருவாக்கியுள்ளேன். 
        இதை நான் எழுத முற்படும்போது தமிழின் தொன்மையையும் பெருமையையும் நம் முன்னோர்களின் கலைத்திறனையும் அவர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ள நினைவுச் சின்னங்களையும் இன்னும்  பல செய்திகளையும்  தெரிந்து கொண்டேன். இதில், கடுகளவை என் கதை மாந்தர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். இவற்றைத் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு இளைஞனும், தான் தமிழனாகப் பிறந்ததற்காக நிச்சயம் கர்வப்படுவான். 
        இப் புதினத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது  உங்களுக்குத் தமிழின் மீதும் நமது முன்னோர்கள் மீதும் இருக்கும் மரியாதை இரண்டு மடங்காகக் கூடினால் அதுவே எனது எழுத்துக்குக் கிடைத்த தவப்பயன். 
                      -என்றும் உங்களோடு எழுத்துவடிவில்
                       கவா கம்ஸ்