பிராஜக்ட் ஃ – மர்ம நாவல்
(Project ‘ak’) – Fiction

Goodreads Book Giveaway

பிராஜக்ட் ஃ - Project AK by Kava Kamz

பிராஜக்ட் ஃ – Project AK

by Kava Kamz

Giveaway ends November 30, 2016.

See the giveaway details
at Goodreads.

Enter Giveaway

 

Front        Back

Author's note
    நம்பமுடியாத பல அதிசயங்கள் இப் பூமிப் பந்தில் நாளும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில, மனிதச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. அதற்காக அவை சாத்தியமே இல்லை என்று நாம் எண்ணுவது அறியாமை. அவ்வாறு எனக்குத் தோன்றிய ஒரு சரித்திர நிகழ்வை நான் ஆராய முற்பட்டேன். அதன் விளைவே இப் புதினம். 
    அந்த ஆய்வில் நான் கற்பனையாய் நினைத்துக் கொண்டிருந்த பலவற்றிற்கு  ஆதாரங்கள் கிடைத்தன. அந்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து கற்பனையோடு தொகுத்து நகைச்சுவையையும் கலந்து இப் புதினத்தை உருவாக்கியுள்ளேன். 
    இதை நான் எழுத முற்படும்போது தமிழின் தொன்மையையும் பெருமையையும் நம் முன்னோர்களின் கலைத்திறனையும் அவர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ள நினைவுச் சின்னங்களையும் இன்னும்  பல செய்திகளையும்  தெரிந்து கொண்டேன். இதில், கடுகளவை என் கதை மாந்தர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். இவற்றைத் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு இளைஞனும், தான் தமிழனாகப் பிறந்ததற்காக நிச்சயம் கர்வப்படுவான். 
    இப் புதினத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது  உங்களுக்குத் தமிழின் மீதும் நமது முன்னோர்கள் மீதும் இருக்கும் மரியாதை இரண்டு மடங்காகக் கூடினால் அதுவே எனது எழுத்துக்குக் கிடைத்த தவப்பயன். 
           -என்றும் உங்களோடு எழுத்துவடிவில்
            கவா கம்ஸ்
Advertisements